கடற்தொழில் அமைச்சரின் சமரச முயற்சி தோல்வியில் – தொடர்ந்தும் முற்றுகைக்குள் யாழ்.மாவட்ட செயலகம்!

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று மீனவர்களுடன் பேச்சுக்களை நடத்த முயற்சித்தபோது, மீனவர்கள் சமரசத்திற்கு சம்மதிக்காத நிலையில், அமைச்சர் திரும்பி சென்றுள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிவரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என மீனவர்களால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும், தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை மீனவர்கள் ஏற்க மறுத்தனர்.

அதனால் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

Related Posts