தேசிய ரீதியில் அரச பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை உடன் முடிவுக்குக் கொண்டு வருமாறும், சகல ஊழியர்களும் இன்று கடமைகளுக்கு திரும்புமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல கல்வி சாரா ஊழியர்களையும் விசேட அறிவித்தல் மூலம் கேட்டுள்ளது.
இன்று கடமைக்கு சமூகம் தராத தகுதிகாண் மற்றும் பயிற்சி ஊழியர்கள் சகலரும் தங்களது தொழில்களிலிருந்து சுயமாக விலகிக்கொண்டவர்களாக கருதப்படுவார்கள் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.