கடமைக்கு வராத ஊழியர்கள் பணிநீக்கம்: அரசாங்கம்அறிவிப்பு!

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கடமைக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அரசாங்கம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

அத்துடன் இன்று காலை 8.30 இற்கு கடமைகளுக்குச் சமூகமளிக்காதவர்கள் வேலையிலிருந்து விலகியவர்களாகக் கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் மின்சக்தி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மின்சாரத் தொழிற்சங்க சம்மேளனம் மீண்டும் தமது பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதனையடுத்தே அரசாங்கத்தினால் மேற்படி உத்தரவு விசேட அறிக்கை ஒன்றின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts