கடன் மற்றும் செலவினங்களை ஏற்றுக் கொண்டால் சய்டமை வழங்க தயார்

சய்டம் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு தான் பெற்ற கடன் மற்றும் நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளம் வழங்குவதற்கான செலவுகள் உட்பட அனைத்தையும் வழங்க முடியுமானால் நிறுவனத்தின் உரிமையை முழுமையாக கையகப்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாக சய்டம் நிறுவனத்தின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்ணாந்தோ கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது தான் இவ்வாறு கேட்டுக் கொண்டதாக வைத்தியர் நெவில் பெர்ணாந்தோ கூறினார்.

நிறுவனத்தை உருவாக்குவதற்காக பெற்ற கடன் 2 பில்லியன் இருப்பதாகவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக மாதாந்தம் 50 மில்லியன் செலவாவதாகவும், இந்த செலவினங்களை தாங்க முடியுமாயின் நிறுவனத்தை கையகப்படுத்திக் கொள்ளுமாறும் தான் கூறிய போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதனை நிராகரித்ததாகவும், தொடர்ந்து மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் நெவில் பெர்ணாந்தோ கூறினார்.

சய்டம் நிறுவனத்தை நடத்திச் செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி எதிர்ப்பில்லை என்றும், அவருடன் இருக்கின்ற சில அடிவருடிகளுக்கே அந்த தேவை இருப்பதாகவும், சில மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கியதாக கூறப்படுவது பொய் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts