கடனட்டை மோசடி: இலங்கையர் உட்பட மூவர் இந்தியாவில் கைது!

இந்திய மத்திய குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் பெங்களூர் நகரில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளடங்குவதாகவும், குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 144 போலியான கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் மூவரும் இந்தியாவின் பல இடங்களில் கடனட்டை மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts