கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்!!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சமீபத்திய கோவிட் 19 நிலைமை அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் 37 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.

அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டபோது அறிகுறி தென்படாதவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ள 755 பேரில் 550 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களில் 338 பேர் பாதுகாப்பு தரப்பினர் என்றும் அதில் 03 இராணுவம் மற்றும் 327 கடற்படையை சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் சுகாதார அமைச்சின் தற்போதைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Related Posts