கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம் பணத்திற்காக விற்கப்பட்டதா??

கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் இறுதிப்போட்டியில் ஊழல் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை விசாரணைக்காக சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த தன்னிடமுள்ள ஆதாரங்களை சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்பிக்கவேண்டும் என்பதுடன் உரிய விசாரணைகளுக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் சங்ககார மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பாரிய குற்றச்சாட்டை முன்வைக்க, அமைச்சருக்கு இவ்வளவு காலம் எடுத்துள்ளது.

அதேவேளை, அமைச்சர் ஆதாரங்களை சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் விசாரணைப் பிரிவுக்கு வழங்கினால் ஊகங்களை தவிர்த்து விசாரணைகளை மேற்கொள்ளமுடியும் எனவும் சங்கா தெரிவித்துள்ள சங்கா, குறித்த காலப்பகுதியில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தவர் தான் விளையாட்டுத் துறை அமைச்சர் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2011 உலக கிண்ணம் பணத்திற்காக விற்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே ஊடகமொன்றுக்கு தெரிவித்த நிலையிலேயே அன்றைய போட்டிக்கு தலையேற்றவர் என்ற நிலையில் குமார் சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts