கடந்த வாரம் 6 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் சிறுகுற்றம் புரிந்த 190 பேர் கைது: டி.ஐ.ஜி

inthu_karunaratna_jaffna_policeயாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் 6 கொள்ளைச் சம்பவங்களில் 4 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) இந்து கருணாரட்ண தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் கடந்த வாரத்தில் 6 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இக்கொள்ளைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம் முறைப்பாட்டின் பிரகாரம் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாகவும், சில கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.

இதேவேளை

சிறுகுற்றம் புரிந்த 190 பேர் கைது

இதில், யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 38 பேரும் அடங்குகின்றனர்.

அத்துடன், குடிபோதையில் கலகம் விளைவித்த 12பேரும் , மதுபோதையில் வாகனம் செலுத்திய , ஆபாச படம் வைத்திருந்தவர்களில் தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது மட்டுமன்றி சட்டவிரோதமான சாராயம் வைத்திருந்த இருவரும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரும் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 23 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சூழலை மாசடையும் வகையில் வைந்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 09 பேரும் அடிகாயத்தை ஏற்படுத்திய ஒருவரும் வீதி விபத்துகள் தொடர்பில் 02 பேரும் திருட்டு மின்சாரம் பெற்ற 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது இடத்தில் கலகம் விளைவித்தவர்கள் 13 போரும் கொள்ளை மற்றும் போலி ஆவணம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் தலா ஒருவரும் ஏனைய குற்றங்களுக்காக 74 பேருமாக மொத்தம் 190 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts