கடந்த வாரத்தில் மட்டும் 67பேர் கைது

arrest_1யாழ். மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பல்வேறு குற்றங்கள் புரிந்த 67பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முஹமட் ஜெப்ஃரி தெரிவித்துள்ளார். இன்று யாழ். பொலிஸ் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சூழல் மாசடைதலுக்கு காரணமாக இருந்த 6 பேரும், காசு மோசடி செய்த ஒருவரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 4 பேரும், சூதில் ஈடுபட்ட 5 பேரும், சட்டவிரோத கல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 9 பேரும், கைகலப்பில் ஈடுபட்ட 38 பேரும், விபத்துக்கு காரணமாகவிருந்த 2 பேரும் உட்பட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Related Posts