கடந்த வருடத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 76 பேர் விபத்தினால் பலி!!

கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் விபத்துக்களில் சிக்கிய நிலையில் ஆயிரத்து 559 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Related Posts