கடந்த உலக கோப்பையில் கடைசி பந்தை வீசிய நுவான் குலசேகரா, இந்த உலக கோப்பையின் முதல் பந்தையும் வீசினார். 20011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் நடந்தது.
இந்தியா-இலங்கை மோதின. இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.2வது ஓவரில் டோணியின் இமாலய சிக்சருடன் வெற்றிக் கனியை பறித்தது. அந்த ஓவரை வீசியது இலங்கை மிதவேக பந்து வீச்சாளர் குலசேகராவாகும். ஆக.. கடந்த உலக கோப்பையின் கடைசி பந்தை குலசேகரா வீசியதாக வரலாறு பதிவு செய்தது.
இந்நிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் இன்று தொடங்கின. முதல் போட்டியில் இலங்கை-நியூசிலாந்து மோதுகின்றன. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஓவரை குலசேகரா வீசினார்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 6 இலக்குகளை இழந்து 331 ஒட்டங்களைப் பெற்றது இதில் அன்டர்சன் அதிகப்படியாக 75 ஒட்டங்களைப் பெற்றார்.
332 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி சற்று முன் வரை 38.2 ஒவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 196 ஒட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
இதே வேளை இன்றை மற்றய போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவுஸ்ரேலிய அணி 21 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை 107 ஒட்டங்களை பெற்றுள்ளது