கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த பல பயணிகள் விடுவிப்பு

கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த நான்கு வௌிநாட்டு பிரஜைகள் மற்றும் 11 ஊழியர்கள் தவிர்த்து ஏனைய அணைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற குறித்த விமானத்தை, அதில் இருந்த பயணி ஒருவரே கடத்தியதாக விமானி கூறியுள்ளார் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

மேலும், அந்த பயணி, உடலுடன் வெடிகுண்டுகளை கட்டியிருப்பதாக மிரட்டல் விடுத்ததாகவும் விமானி கூறியுள்ளார்.

Related Posts