கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு

பம்பலபிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மாவனெல்லை பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவனெல்லை பகுதியில் அடையாளம் காணமுடியாத இளைஞர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாவனெல்லை பகுதியில் இருந்து நேற்று இரவு குறிப்பிட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பதை உறுதி செய்வதற்கான டி.என்.ஏ பரிசோதனை இடம்பெறும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts