நவம்பர் மாதம் 17 ஆம் திகதி யாழ்.வட்டுக்கோட்டையில் வைத்தது வெள்ளை வானில் கடந்த கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் 19 நாட்களின் பின்னர் யாழ்.செம்மணிப் பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த யோகேஸ்வரன் அருள்ஜீவன் (வயது 29) தாம் விடுவிக்கப்பட்டது தொடர்பில் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழவில் நேற்று (07.01.2013) வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கடத்தியவர்கள் யார்? என்னத்திற்காக கடத்தினார்கள் என்பது பற்றி தனக்கு ஏதும் தெரியாதென்றும் இவர்கள் தன்னைத் துன்புறுத்தவில்லை யென்றும் அவர் தெரிவித்தார்.