குருநாகல், கனேவத்தை, அம்பகொலவெவ பிரதேசத்தில் கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியான பமாரா கேஷனி பண்டார( நான்கு வயது 3 மாதங்கள்), நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.
குருநாகல் இப்பாகமுவ, கும்புக்கெட்டே பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே அக்குழந்தை மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் அவ்வீட்டிருந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை, வீடொன்றின் அறையில் மர பலகைகளுக்கு இடையில் இருந்ததாகவும், அவருடைய தலைமுடி கத்தரிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பாகமுவையிலுள்ள குவேனியின் கற்களுக்கு இடையே புதையல் இருப்பதாக நிறையபேர் கூறுகின்றனர். விஜயகுமார என்ற அரசன், குவேனி மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகளை விரட்டியதார்.
அதற்கு பின்னரே குவேனி, குருநாகலுக்கு வந்துள்ளார். அவர் வருவதற்கு முன்னர் இந்த கல் மீதேறியே விஜயகுமாரவை சாபமிட்டுள்ளார். அதுவே குவேனி கல்லாகியது என்பது வரலாறாகும்.
சரி விடயத்துக்கு வருவோம்…குழந்தையை கைப்பற்றியவர் தெரிவிக்கையில்,
எனது வீட்டுக்கு அருகிலிருக்கின்ற தம்பியொருவர் இன்று (நேற்று) மாலை 3 மணியளவில் ஓடோடிவந்து, (கடோல் பொரனுவ) செங்கல் சூலை அருகில் சிறுமியொருவர் நிற்பதாக தெரிவித்தார்.
என் கால்களை என்னாலே நம்பமுடியவில்லை. செங்கல் சூலையை நோக்கி நான் வேகமாக ஓடினேன். அழகான பெண் பிள்ளையொன்று நின்றுகொண்டிருந்தது. காணமல் போன குழந்தை இதுவாக தான் இருக்கவேண்டும் என்று அத்தருணத்திலேயே நினைத்துவிட்டேன். குழந்தையை கட்டியணைத்து தூக்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்தேன்.
குழந்தை சிறிது நேரம் பயத்தில் இருந்தது. பயம் தெளிவடைந்து வருகையில், மகளே எங்கம்மா இருந்தாய் என்று வினவினேன். இன்னும் பல விபரங்களை அக்குழந்தையிடம் கேட்டேன்.
யாரோ ஒரு மாமா, இன்றுக்காலை பாற்சோறு கொடுத்ததாகவும் முடியை வெட்டிவிட்டதாகவும் தெரிவித்தார்.
எங்கு இருந்தாய் என்று கேட்டேன். அவர், ஹம்புகாமி வீடு இருக்கும் திசையை கையால் காண்பித்தார். அதன் பின்னர் நான், வெல்ல பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தேன் என்றார்.
அந்த வீடு இருக்கும் பக்கத்திற்கு இனந்தெரியாத நபர்கள் அவ்வப்போது சென்று வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்துக்கு இடமான வீட்டிலிருந்த தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதான சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை, குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.