நேற்று முன்தினம் இரவு தமது வழமையான ரோந்து பணியை பொலிஸார் மேற்கொண்டிருந்த வேளை 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் கொட்டடி மீனாட்சி அம்மன் வீதியை சேர்ந்த சிறுவனே கஞ்சாவை நுகர்விற்காக வைத்திருந்ததன் பேரில் கைது செய்யப்ப ட்டார்.
கைது செய்யப்பட்ட சிறுவன் நேற்று யாழ். நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார.