கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

arrest_1யாழ்ப்பாணத்தின் முக்கிய சில வீதி ஒழுங்கைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

யாழ்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து இருவரும் கைது செய்யப்ட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 800 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்.பொம்மை வெளிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனவும் மற்றைய நபர் புத்தளத்தை சேர்தவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள் யாழின் சன நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றில் ஆட்டே ஒன்றில் வைத்து கஞ்சா விற்பனையை மேற்கொண்டுள்ளதாகவும் இவர்களை சிவிலில் சென்ற பொலிஸார் விசாரித்த போது தப்பியோட முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இருவரும் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்

Related Posts