கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை ஏறிய பிக்குகள்! வசமாக மாட்டினர்!!

காவி உடை அணியாமல் சாதாரண உடையில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த 5 பௌத்த பிக்குகளை ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து இவர்கள் வந்துள்ளனர். 5 பௌத்த பிக்குகளில் ஒருவரிடம் கஞ்சா பக்கட்டுகளும் இருந்துள்ளன.

நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் ஹற்றன் – குடாகம பகுதியில் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த ஹட்டன் பொலிஸாரால் இந்த 5 பேர் பயணித்த வாகனம் திடீரென பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் ஒருவரிடமிருந்து கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 5 பேரையும் கைதுசெய்த ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts