கச்சத்தீவை கோரும் உரிமை தமிழகத்திற்கு இல்லை – டக்ளஸ்

daklaus கச்சத்தீவை கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பது தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1974ம் ஆண்டு இலங்கைக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்றின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

கச்சத்தீவை மீட்டெடுப்பது தொடர்பில் அண்மையில் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததோடு திமுக தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

எனினும், ஜெயலலிதாவின் கோரிக்கையானது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதென டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளினதும் மீனவர்களது வாழ்வாதாரப் பிரச்சினையாக இதனைக் கருத வேண்டுமென டக்ளஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts