கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது என யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இந்த தடவை நடைபெறவுள்ள இந்த திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 10,000 யாத்திரிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
திருவிழாவிற்கு மக்கள் 21ஆம் திகதியில் இருந்து செல்ல முடியும். பாதுகாப்பு சுகாதாரம் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
கச்சதீவுக்கு குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து செல்பவர்களுக்கு 250 ரூபாவும் நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து செல்பவர்களுக்கு 200ரூபாவும் அறவிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
குறித்த பகுதியில் மக்களின் தேவைகளுக்காக இலங்கை வங்கி, பொலிஸ் நிலையம், சுங்கத் திணைக்களம் மற்றும் அம்பிலன்ஸ் படகு என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.