கச்சதீவு நோக்கி புறப்பட்ட 3௦௦ பேர் கைது

arrestஇலங்கை சிறையில் உள்ள 94 மீனவர்களையும் 62 விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேர்க்கோடு கிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து மீனவர்கள் ஊர்வலமாக புறப்பட்டுள்ளனர்.

மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், தேவதாஸ், சேசு, எமரிட், ராமகிருஷ்ணா குடில்சாமி பிரணவநந்தா, பங்கு தந்தை சகாயராஜ் ஆகியோர் தலைமையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

கச்சதீவுக்குள் அத்துமீறி நுழைந்தால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று என இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்.

பேரணி ஆரம்பமாகி சிறிது நேரத்தில் ராமேஸ்வரம் பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தி சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பதட்டம் நிலவிவருவதனால் பாதுகாப்புக்காக அங்கு பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts