கச்சதீவு செல்லத் தயாரான நிலையில் தமிழக மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள 94 மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் பறிமுதல்செய்யப்பட்ட 64 விசைபடகுகளை மீட்பதற்கும் தங்கள் படகுகளில் வெள்ளை கொடி கட்டி குடும்பத்துடன் கச்சத்தீவு சென்று சரணடையும் போராட்டத்தை இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கிறார்கள்.

fisher-man-kachchathevu

கடந்த 24ஆம் திகதி முதல் அந்த மீனவர்கள் பணிநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக படகுகளில் வெள்ளை கொடிகளை கட்டி குடும்பத்துடன் இன்று காலை கச்சதீவுக் செல்வதற்கு தாயரான நிலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் திரண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்களுடன் புதுக்கோட்டை மீனவர்களும் இணைந்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்குடன் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இராமேஸ்வரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Posts