கச்சதீவுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்தில்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்வதற்காக குறிகாட்டுவான் துறையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

பெருமளவான பக்தர்கள் இம்முறை கச்சதீவுக்கு செல்வதற்காக குறித்த இறங்கு துறைக்கு சென்ற நிலையில் அங்கு போதிய படகுகள் காணப்படவில்லை. இதனால் மிக நீண்ட நேரம் அங்கு மக்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் கடற்படையினர் மீள காங்கேசன்துறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

காங்கேசன்துறையில் இருந்து கடற்படையின் கப்பலில் இம் மக்களை கச்சதீவுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சுமார் 300 பக்தர்கள் இவ்வாறு தற்போது கடற்படையினரால் காங்கேசன்துறைக்கு பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts