கச்சதீவில் சிறிய தீ விபத்து!

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்றிரவு திடீரென மெழுகுவர்த்தி ஏற்றும் இடத்தில் தீப் பற்றியதில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மெழுகுதிரி ஏற்றும் இடத்தில் திடீரென தீப்பற்றியது. இதனால் சிறிது நேரம் அப்பகுதி புகைமூட்டமாக காணப்பட்டது. எனினும் தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தமிழக மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவைப் புறக்கணித்துள்ள நிலையில் இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளமையால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. எனினும் கடற்படையின் உதவியுடன் உடனடியாக நெருப்பு அணைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Related Posts