கச்சதீவில் கொடி நாட்ட வந்தவர்கள் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவிற்கு இந்திய தேசிய கொடியுடன் பேரணியாக வர முயன்ற 50க்கும் மேற்பட்ட பாரத் மக்கள் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு கச்சதீவு பகுதியில் உள்ள பாரம்பரிய உரிமையை நிலைநாட்டும் விதமாக 68 வது சுதந்திர தினத்தில் கச்சத்தீவு சென்று இந்திய தேசிய கொடி ஏற்ற கோவையில் இருந்து பாரத் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணாத்துரை தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரம் வந்தனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இந்திய தேசிய கொடியுடன் பேரணியாக கடற்கரை சென்று படகு மூலம் கச்சதீவு சென்று இந்திய தேசிய கொடியை ஏற்றி பாரம்பரிய உரிமையை நிலை நாட்ட இருந்தனர்.

இந்த நிலையில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக கடற்கரை நோக்கிச் சென்ற போது பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸார் பேரணியை தடுத்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் ஏனையவர்கள் படகு மூலம் கச்சதீவு சென்று விடாமல் தடுக்க துறைமுகத்தில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts