காரைநகர் கசூரினா கடற்கரையில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.புன்னாலைக்கட்டுவன் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் நிதர்சன் (வயது 21) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் கசூரினா கடற்கரைக்கு நேற்று மாலை குளிக்கச் சென்ற இவர் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று மாலை வரை தேடியபோது அவரை காணவில்லை.
கடற்கரை நீச்சல் பொலிஸாரின் உதவியுடன் இன்று தேடுதல் நடத்திய வேளை, கடலில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் கூறினர்.