கங்கை அமரன் வீட்டில் பொலீஸார் திடீர் சோதனை, 2 சிறுமிகள் மீட்பு!

திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன், தனது சென்னை அடையாறு வீட்டில் மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரனுடன் வாழ்ந்து வருகிறார்.

gangai_amaran

அவருடைய வீட்டில், வீட்டுவேலைக்காக சிறுமிகள் வேலை செய்வதாக குழந்தைகள் நல அமைப்புக்கு வந்த புகார்களை அடுத்து, நேற்று காலை அவரது வீட்டில் திடீர் சோதனை நடந்தது.

சோதனையின் போது அடையாறு பொலீஸாரும் உடனிருந்தனர். இந்த சோதனையில் கங்கை அமரன் வீட்டில் இரண்டு சிறுமிகள் வேலை செய்துவந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கங்கை அமரனிடம் பொலீஸார் விசாரணை செய்தனர். சிறுமிகளின் பெற்றோர்களின் அனுமதியோடுதான் சிறுமிகள் இங்கு பணிபுரிவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியது தொடர்பாக கங்கை அமரன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts