கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்று நோய் பாதிப்பு ஏற்படலாம்

கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் புற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐதராபாத்தில் உள்ள என்சிசிஎம் என்னும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

gangai

ஐதராபாத்தில் உள்ள Department of Atomic Energy’s National Centre for Compositional Characterisation of Materials (NCCM), பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடைபெற்றபோது கங்கையின் நதி நீரை எடுத்து சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் கங்கை நதி நீரில் Chromium 6 உள்ளதாகவும், இந்த நச்சுத்தன்மையால் புற்று நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.

மேலும், நச்சுத்தன்மை நிறைந்த குரோமியம் கங்கையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு அதிகமாக உள்ளதென என்சிசிஎம் தலைவரான டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.

Related Posts