ஓய்வே அறியாத ஜி.வி.பிரகாஷ்குமார்!

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் நடிகராக இருப்பவர் விஜயசேதுபதி. அதிகபட்சம் 3 மாதங்களுக்கு மேல் அவர் எந்த படத்தையும் இழுத்தடித்ததில்லை. அதோடு, அடுத்தடுத்து அவரை வைத்து படம் இயக்க பல நிறுவனங்கள் வெயிட்டிங்கில் இருப்பதால் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி.

gv-pirakash

அவரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும் தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்தவகையில், டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களைத் தொடர்ந்து புருஸ்லீ, எனக்கு இன்னொரு பேரு இருக்கு படங்களில் நடித்து விட்டார். இதையடுத்து கெட்ட பையன்டா இந்த கார்த்தி, கடவுள் இருக்குறான் குமாரு போன்ற படங்களில் நடிக்கிறார். இதுதவிர பல படங்களுக்கான கதையை ஓகே பண்ணி வைத்திருக்கிறார்.

இதில், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, புருஸ்லீ படங்களை தலா 2 மாதம் வீதம் நான்கே மாதங்களில் நடித்துக்கொடுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதோடு, இந்த படங்களுக்கு தானே இசையமைக்கும் அவர், விஜய்யின் தெறி உள்பட மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும் இசையமைக்கிறார். அதனால், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அவர், பகலில் படப்பிடிப்பு, இரவில் இசைப்பணிகள் என்று ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கிறார்.

Related Posts