இலங்கையில் விவசாயிகளுக்குரிய ஒய்வூதியம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களில் பலரும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இலங்கையில் விவசாயிகளுக்கான ஒய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
விவசாய காப்புறுதி சபை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளின் தகவல்களின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு 17 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு அமைச்சர்கள் தொடக்கம் மனித உரிமை அமைப்புகள் என பலரையும் சந்தித்து தொடர்ந்தும் மனுக்களை கையளித்தும் முறையீடுகளை செய்தும் வருகின்றனர்.
இந்த ஓய்வூதியம் வழங்கப்படுவது நாடெங்கிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சுத்தான் இது தொடர்பான முடிவு எடுக்க வேண்டும் என தமது பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளின் பதில்களிலிருந்து அறிய முடிந்தது.