ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று மாலை விசேட தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, இன நல்லிணக்கத்துக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தான் ஓய்வு பெற்றாலும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.