ஓய்வு தினத்தை அறிவித்த சங்கா

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, தான் இந்த வருடம் ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

kumar-sangakkara

கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றிற்கு இந்த தகவலை அவர் கூறியுள்ளார். நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள குமார் சங்ககார – ஜூலை, ஓகஸ்ட் காலப்பகுதியில் நடைபெறவுள்ள இரண்டு அல்லது ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரே குமார் சங்ககாரவின் இறுதி டெஸ்ட் தொடராக அமையவுள்ளது.

குமார் சங்ககார தனது கிரிக்கெட்டின் வாழ்நாளில் உயரிய நிலையில் தற்போதே இருப்பதாக வர்ணிக்கப்படுகின்றது. “தான் அந்த நிலையில் இருக்கின்றேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அணிக்கு எது தேவையோ அதை நான் செய்து வருகின்றேன்” என குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

Related Posts