ஓய்விற்கு பின்னரும் அசத்தும் ஜெயவர்த்தனே

இங்கிலாந்தில் நடைபெற்ற வொர்செஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது அதிரடி சதத்தால் சமரெஷ்ட் அணியை வெற்றி பெற செய்தார் ஜெயவர்த்தனே.

Mahela Jayawardene

இங்கிலாந்தில் ராயல் லண்டன் தொடருக்கான காலிறுதி போட்டி, அந்நாட்டில் உள்ள கண்டிரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வொர்செஸ்டர்ஷையர் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

எளிய இலக்கை விரட்டிய சமரெஷ்ட் அணிக்கு ஜெயவர்த்தனே மற்றும் அலென்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் குவித்தனர்.

அலென்பி 81 ஓட்டங்கள் குவித்த போது மோயின் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வந்த ஜெயவர்த்தனே 117 ஓட்டங்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் அந்த அணி 36.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய ஜெயவர்த்தனேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Related Posts