மதுபான நிலையம் அமைக்க பாடசாலை உள்ளிட்ட அமைப்புக்கள் சம்மதக் கடிதங்கள் வழங்கியமை வேதனையளிக்கின்றது!! – அரசாங்க அதிபர்

ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதற்கு பாடசாலை மற்றும் ஆலய நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புக்கள் சம்மதக் கடிதங்கள் வழங்கியமை வேதனையளிப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வவுனியா மாவட்ட செலயகத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஓமந்தையிலுள்ள பாடசாலை உட்பட ஆறு அமைப்புக்கள் சம்மதக் கடிதங்கள் வழங்கியமை காரணமாகவே ஓமந்தையில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மதுவரித்திணைக்களத்தினால் சட்டபூர்வமாக ஓமந்தைப்பகுதியில் அனுமதியளிக்கப்பட்டே மதுபான விற்பனை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கசிப்பு, கஞ்சா நடவடிக்கையினைக்கட்டுப்படுத்த மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு சம்மதக் கடிதங்கள் பாடசாலை உட்பட ஆலயம் கிராம அமைப்புக்கள் என ஆறு அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நான் வேற்று மதத்தினை வழிபட்டு வருபவன். மதுபானம் அருந்துபவனல்ல இவ்வாறு சம்மதக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை மிகவும் வேதனையளிக்கும் சம்பவமாகவே என்னால் கருத முடிகின்றது” என வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா மேலும் குறிப்பிட்டார்.

Related Posts