ஓட்டோ, கார்களில் சாரதி தவிர்ந்து இருவர் பயணிக்க அனுமதி!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு முச்சகர வண்டிகள் மற்றும் வாடகைக் கார்களில் (Taxis) சாரதி தவிர்ந்து இருவர் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

நாட்டில் 18 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் போக்குவரத்துச் சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகைக் கார்கள் சேவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தற்போது முச்சகர வண்டிகள் மற்றும் வாடகைக் கார்களில் (Taxis) சாரதி தவிர்ந்து இருவர் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related Posts