Ad Widget

ஓட்டு போட்டவர்களின் விரல்களை வெட்டிய தாலிபான் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் வாக்குப்பதிவு செய்த 11 பேரின் கைவிரல்களை தாலிபான் தீவிரவாதிகள் வெட்டியுள்ளனர்.

abkanistan

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. எனவே, மீண்டும் மறு தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போடக் கூடாது என்று தாலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். அதையும் மீறி பொது மக்கள் வாக்களித்தனர்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள், ஹீராத் மாகாணத்தில் ஒரு கிராமத்தில் வாக்குப்பதிவு செய்த 11 முதியவர்களை பிடித்துச் சென்றனர்.

பின்னர், தங்களது எச்சரிக்கையை மீறி வாக்குப்பதிவு செய்தததை கண்டித்து, வாக்குப்பதிவு செய்ததற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டிருந்த அவர்களின் அந்த கைவிரல்களை வெட்டி துண்டித்தனர்.

இதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த தகவலை ஆப்கானிஸ்தான் உள்துறை துணை அமைச்சர் ஆயூப் சலாங்கி தெரிவித்துள்ளார்.

Related Posts