ஓட்டுத்தொழிற்சாலையை மீள இயக்க நடவடிக்கை!

ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை அடுத்த ஆண்டு முற்பகுதியிலிருந்து புதுப் பொலிவுடன் மீள இயக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

dak-thevananthaaa

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் குறித்த ஓட்டுத் தொழிற்சாலையை நவீன மயப்படுத்தி புதுப்பொலிவுடன் இயங்க வைப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அவ்வகையிலேயே இத் தொழிற்சாலையை புதுப்பொலிவுடன் நவீனமயப்படுத்தி இயங்க வைப்பதற்கு முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொழிற்சாலை இயங்கவுள்ளது.

அந்தவகையில் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts