ஓக்கி சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது.
இந்த சூறாவளி தொடர்ந்தும் நகர்ந்து செல்வதினால் இலங்கை;கு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம்.
மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வலுவான காற்று வீசும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறி;ப்பிடப்பட்டுள்ளது.