யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்துவரும் மக்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி 31 முகாம்களில் வசிக்கும் 971பேர் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் காணி இல்லாதோருக்கு வழங்கப்பட்டுள்ள காங்கேசன் துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கு அண்மையில் வழங்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் வீடமைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும், அதன்பின்னர் எஞ்சியிருக்கும் 767 குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கான பணிகளை அரசாங்கம் ஆரம்பிக்கவிருப்பதாகவும் தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.