தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் ( QR குறியீடு) இல்லாவிட்டால் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாகன இலக்கத் தகட்டின் கடைசி முறைக்கு எரிபொருள் விநியோகம் உள்பட ஏனைய அனைத்து முறைகளும் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் இரத்து செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை இன்று முதல் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் ஜூலை 31ஆம் திகதிவரை, QR குறியீடு அமைப்பு மற்றும் வாகன இலக்கத் தகட்டின் கடைசி எண் ஆகிய இரண்டிற்கும் எரிபொருள் வழங்கப்படும்.