“தமிழர்களாகிய நாம் நமது தேசியத்தைக் கட்டிக்காக்கவேண்டும் என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தமிழனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி வாக்களிப்பதன் மூலமே கட்டிக்காக்க முடியும்.” – இவ்வாறு வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஒவ்வொரு கிராமங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டு சின்னத்துக்கு தமது வாக்கை வழங்குவதோடு, கண்டிப்பாக மூன்று வேட்பாளர்களையும் தெரிவுசெய்வதன் மூலமே நமது இனத்தின் வெற்றியை உலகுக்கு அறிவிக்கமுடியும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு தனி வேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை மக்கள் வழங்காது, ஏனைய இரண்டு விருப்பு வாக்குகளையும் கூட்டமைப்பின் ஏனைய இரு வேட்பாளர்களுக்கு இடவேண்டும்.
இதேவேளை, வேட்பாளர்கள் போட்டித்தன்மையின்றி முழுத் தமிழினத்தின் வெற்றிக்காக உழைக்கவேண்டும்” – என்றார்.