ஒலிம்பிக் போட்டி : 9 போட்டியாளர்களுக்கு 46 அதிகாரிகள் சென்றமை குறித்து விசாரணை!

அண்மையில் பிரேசில் ரியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டித் தொடரில் இலங்கையின் சார்பில் 9 வீர வீராங்கணைகள் பங்கேற்றிருந்தனர். ஆனால் இவர்களுடன் மொத்தமாக 46 அதிகாரிகளும் பிரேசில் சென்றிருந்தனர்.

ஒன்பது வீர வீராங்கணைகளுக்காக ஏன் 46 அதிகாரிகள் பிரேசில் சென்றார்கள் என்பது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் கடந்த ஐந்தாண்டு கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த அறிக்கையில் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Related Posts