ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் – சச்சின்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே குரல்கொடுத்துள்ளனர்.

sachin_worne

தெண்டுல்கர் கூறும் போது, ‘ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நல்ல யோசனை. அதற்கு 20 ஓவர் கிரிக்கெட் பொருத்தமாக இருக்கும். கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாதவர்களும் கூட 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்’ என்றார். இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதிகள் அடுத்த மாதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை சந்தித்து பேசுகிறார்கள்.

Related Posts