ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்! – கிளிநொச்சியில் சம்பந்தன்

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

sambanthan-mavai-kili-1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் சமகால நிலைமைகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், தாங்கள் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே சமஷ்டிக் கோட்பாட்டை தந்தை செல்வா தலைமையில் முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சமஷ்டி என்கிற அதிகார பரவலாக்கம் கொண்ட விடயத்தை தான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டதாக வெளியில் தெரிவிக்கப்படுகின்ற விடயங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நெடுங்கேணி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்டு இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டதாக கூட்டமைப்பால் கூறப்படும் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மக்கள் இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளனர் எங்கள் பிரதிநிதிகளிடம் நாங்கள் கேட்க எமக்கு யாரும் ஒழுங்கமைக்க தேவையில்லை என்றனர்

sambanthan-mavai-kili-3

sambanthan-mavai-kili-2

Related Posts