ஒற்றுமையின் தேவைக்காக மௌனமாக இருக்கின்றோம்; உரிய நேரத்தில் பதிலளிப்போம்

சாவகச்சேரி சங்கத்தானையில் நடைபெற்ற மண்டப திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ. சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து இலங்கை தமிழரசுக் கட்சி வெளியேறவேண்டும் என கூறப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெரிவிப்பது கொப்பில் இருந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவதைப்போல் உள்ளது.

அவ்வாறு கொப்பில் இருந்து கொண்டு மரத்தை வெட்டினால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழரசுக் கட்சி தொடர்பாக பேசுவதற்கோ அல்லது கட்சியை வெளியேற வேண்டும் என பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும்.

மக்களின் வாக்குறுதிகளை நாங்கள் தூக்கி போடவில்லை. மக்களை மனதில் வைத்துக்கொண்டே நாங்கள் செயலாற்றி வருகின்றோம். காலத்தின் தேவைக்கு ஏற்ப நாம் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய தேவையாக உள்ளது.

எவ்வளவுக்கு எவ்வளவு ஒற்றுமையாக இருக்கின்றோமோ அவ்வளவுக்கு எமது ஒற்றுமை பலப்பட்டு எமது மக்களின் தேவைகளையும் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

எமது ஒற்றுமைக்காக மௌனமாக இருந்து செயற்பட்டு வருகின்றோம். இதனை விடுத்து திருப்பி பேசமுடியாது என நினைக்கவேண்டாம். நாம் உரிய வேளையில் உரிய பதிலை தெரிவிப்போம்.

கடந்த காலங்களில் யார் யார் எத்தகைய விடங்களை செய்தார்கள் மக்களுடன் என்ன விடயங்கள் கதைத்தார்கள் என்பது எமதுக்கு தெரியும். நாம் குழப்பத்தை விரும்பவில்லை. உரிய நேரத்தில் உரிய பதில்கள் தருவோம் என்றார்.

Related Posts