ஒரே வீதியை இரண்டு பக்கத்தில் இருவேறு விதமாக திறந்து வைத்த அமைச்சர்கள்

ஹபராதுவ, லியனகொட, லுனுமோதல வீதியை இரண்டு அமைச்சர்கள் திறந்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த வீதியின் ஒரு பகுதியை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், மற்றைய பகுதியை நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும் திறந்து வைத்துள்ளனர்.

ஹபராதுவ ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சந்திரலால் அபேகுணவர்த்தனவினால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சந்திமவீரக் கொடியின் அழைப்பில் டிலான் பெரேராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வீதியின் இரு பகுதிகளையும் குறித்த அமைச்சர்கள் திறந்து வைத்துள்ளனர்.

ஒரு பாதையை இரண்டு அமைச்சர்களினால் இரண்டு பக்கங்களில் திறக்கப்பட்டமை தொடர்பில் ஹபராதுவ மக்கள் கடும் அதிருப்பதி வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Related Posts