ஒரே வீட்டில் 31 டாக்டர்கள்

stethoscope-doctor-nerusஜெய்ப்பூரில் ஒரு குடும்பத்தில் 31 பேர் மருத்துவர்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாதுதான். ஆனால், உண்மையிலேயே வீனமிரிதா பாட்னி குடும்பத்தில் அவருடன் சேர்த்து 32 பேர் டாக்டர்கள்.

சமீபத்தில் வெளியான ஆர்பிஎம்டி தேர்வில் 107வது இடத்தைப் பெற்று மருத்துவப் படிப்பிற்குள் நுழைந்துள்ள வீனாவும் முடித்து விட்டால் அவர்களது குடும்பத்தில் 32 பேர்.

இவருடைய குடும்பத்தில் முக்கால்வாசிப் பேர் மருத்துவர்கள்தான். ஜெய்ப்பூரில் அவரது குடும்பத்தையே “ஜெய்ப்பூர் டாக்டர் பரிவார்” என்றுதான் அழைக்கின்றார்கள்.

அவருடைய மாமாக்கள், அத்தைகள், சித்திகள், சகோதர, சகோதரிகள் என அனைவரும் மருத்துவர்கள். இரண்டாம் தலைமுறையின் முதல் மருத்துவராக தற்போது வீனாவும் மருத்துவ படிப்பில் சேர உள்ளார்.

இவரது வீட்டில் 7 பொது மருத்துவர்கள், 5 குழந்தைப் பேறு மருத்துவர்கள், 3 கண் மருத்துவர்கள், 3 காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், 3 நரம்பியல் வல்லுனர்கள் என்று 31 மருத்துவர்கள் உள்ளனர்.

“இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்ததற்காக நான் மிகவும் பெருமைப் படுகின்றேன்” என்று கூறியுள்ளார் வீனாமிரிதா. மாநில அரசு மருத்துவர்கள் பற்றாக்குறையைச் சந்தித்தபோது இவர்களுடைய குடும்பம்தான் இளைய தலைமுறையினருக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக விளங்கியது.

ஜெய்ப்பூரின் தலை சிறந்த மருத்துவர்களை கொண்ட இந்த குடும்பத்தின் டாக்டர்கள் பலபேர் ஷவாய் மான் சிங் மருத்துவமனையில் பணிபுரிகிறார்கள்.

குழந்தைகளுக்கு படிப்பை வழங்கவே தயங்கிய காலம் போய், ஒரு குடும்பமே மருத்துவப் படிப்பை முடித்துள்ள இச்செய்தி, பழமை நிறைந்த ஜெய்பூரின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

Related Posts