ஒரே நாளில் 862 பேர் உயிரிழப்பு!

கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 862 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 862 பேர் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,500 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு 190,873.

இதேவேளை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, கிட்டத்தட்ட 80,000 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா தோன்றிய உகான் நகரில் அதன் வீரியம் குறைந்து வருகிறது. நேற்று கூடுதலாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கியது. ஆனால், சீனா முழுவதும் மேலும் 13 பேர் பலியானார்கள்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் உலக நாடுகள் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், கிர்கிஸ்தான் நாடு, வெளிநாட்டினர் வருகைக்கு தடை விதித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை ‘போர்’ என்று வர்ணித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் 15 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். பிரான்சில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 6,600 ஆக அதிகரித்துள்ளது.

ஐரோப்பா கண்டத்துக்குள் பிற நாட்டினர் அத்தியாவசியம் இல்லாத பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்க ஐரோப்பா முடிவு செய்துள்ளது. எல்லைகளை மூட திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் நாட்டில் பேருந்து, புகையிரதம், விமான சேவைகள் இன்று (புதன் கிழமை) முதல் இரத்து செய்யப்படுகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது.

கொரியாவில் வைரஸ் பரவலாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று 93 பேர்தான் தொற்றிற்குள்ளானார்கள். வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,413 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் நேற்று 13 புதிய தொற்றுக்களும், 11 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை 80,894 ஆகவும், உயிரிழப்பு 3,237 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலியா தனது குடிமக்களை பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா வைரசினால் 345 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 2,503 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,506 ஆக உயர்ந்துள்ளது.

Related Posts