ஒரே நாளில் 32 லட்சம் ரூபாய்க்கு தொலைபேசியை உபயோகித்தவர் குறித்து விசாரணை

men-telephone-billஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி சேவையை வழங்கம் நிறுவனம் ஒன்று ரோமிங் வசதியுடன் கூடிய சிம் கார்ட் ஒன்றை வழங்கியுள்ளது.

எனினும் குறித்த வாடிக்கையாளர் அந்த சிம்மை பயன்படுத்தவில்லை. அதனை அவரது உறவினரான மொஹமட் முஸாரப் என்ற அவரது உறவினரிடம் வழங்கியுள்ளார்.

அவர் ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவுக்கு ரோமிங்கை பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து சேவை வழங்கும் நிறுவனம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Related Posts