ஒரே நாட்டிற்குள் சமத்துவமாக வாழக்கூடிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளைாயட்டு விழா நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாரிய மாற்றத்தை, இந்த ஆட்சியை நடத்துகின்றவர்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் பெரும்பான்மை இன மக்கள் தான் சுதந்திரம் அடைந்தார்கள் ஏனைய சிறுபான்மை மக்கள் சுதந்திரமடையவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அதற்கு காணரம் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களால் சகல இனத்தை சார்ந்தவர்களால் வெவ்வேறு இனத்தை பிரதிநிதித்துவப்டுத்துகின்ற அரசியல் கட்சிகளால் ஒருமித்து இந்த நாட்டிற்கு ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை என்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது அரசியல் சாசனத்தை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றினார்கள். பின்னர் 72ஆம் ஆண்டு, 78 நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனங்கள் தனிப்பட்ட கட்சியினால் ஏனைய கட்சிகளின் ஆதரவை பெறாமல் ஏனைய இனங்களின் நிறைவேற்றப்பட்டன.

அந்த காரணத்தினால் அந்த அரசியல் சாசானங்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களை ஒற்றுமைப்படுத்தவில்லை என இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். தற்போத நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளும் ஆட்சி புரந்து வருகின்றார்கள். எனவே புதிய சாசனத்தை உருவாக்க கூடிய வாய்ப்பு அவர்களுக்கு இருக்கின்றது.

இந்த அரசியல் சாசனம் சமரசத்தின் அடிப்படையில் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடும் என்ற அடிப்படையில் வாழ உருத்துடையவர்கள் என்ற அடிப்படையில் அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு,

ஒவ்வொரு இனத்தின் இறைமையும் மதிக்கப்பட்டு அந்த இறைமையின் அடிப்படையில் இந்த அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என விரும்புகின்றோம். அவ்விதமான அரசியல் சாசனம் உருவாவதற்கு எங்களால் இயன்ற அத்தனை ஒத்துழைப்புக்களை முயற்சிகளை தாம் நல்கி வருவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் வாழும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் நாடு பிரிக்கப்படாமல் நாட்டிற்கு குந்தகமும் ஏற்படாமல், நாடு பிளவு படாமல் ஒரே நாட்டிற்குள் ஒருமித்து ஒற்றுமையாக சமத்துவமாக சமாதானமாக வாழக்ககூடிய ஒரு அரசியல் சாசனம் உருவாக்க வேண்டும். அதற்கு பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர்கள் மாத்திரமின்றி சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்களும் தங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Posts